இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே