சென்னையில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது – சென்னை சுங்கத்துறை விளக்கம்!

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சுங்கத்துறை அதிகாரிகள், சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறைக்கு சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது.

மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றி, குடியிருப்புகள் இல்லை.

லெபனானில் நடந்தது போன்று நடக்க வாய்ப்பில்லை. மக்கள் அச்சமடைய தேவையில்லை.

6 வருடமாக பறிமுதல் செய்து வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் , நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளது.

கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ-ஏலம் முறையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே