விழாக்காலத்தையொட்டி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே போன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையாக டிக்கெட் கட்டணத்தின் மூன்று மடங்கு தொகை பண வவுச்சர்களாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டு காலத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மூலதன செலவாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே