#BeirutBlast : திருமண போட்டோஷூட் நடந்த போது வெடி விபத்து – வைரல் வீடியோ

பெய்ரூட்டில் மணப்பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தபோது நடந்த வெடி விபத்து பதிவான வீடியோ வைரலாகி வருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல லட்சம் பேர் ஒரே நொடியில் வீடுகளை இழந்தனர்.

இந்த துயர்மிகுந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. 

ஒரு வீடியோவில், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார்.

இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் தற்போது அதனை வெளியிட்டுள்ளார்.

இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே