இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான செய்தியில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து அமித்ஷாவிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்ததாகவும்; அது குறித்து விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக நடத்தும் பேரணியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.