ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட மாமனார் .

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்கிற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்றால் உயிர். எங்கு சென்றாலும் ஆராத்யாவின் கையை பிடித்துக் கொண்டு தான் செல்வார்.
ஐஸ்வர்யா தன் மகள் மீது வைத்திருக்கும் அதிகமான பாசத்திற்காக அவரை சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள். நேற்று பிறந்த கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கான் எல்லாம் தனியாக நடந்து செல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா ஆராத்யாவின் கைகளை விடுவதாக இல்லை. அந்த கைகள் வலிக்கப் போகிறது, இனியாவது விடுங்கள். ஆராத்யாவை யார் கையும் பிடிக்காமல் நடக்க விடுங்கள் என்று ஐஸ்வர்யா ராயிடம் பலர் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ஆராத்யாவுக்காக படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்தார். ஆராத்யா ஓரளவுக்கு வளர்ந்த பிறகே ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு செகண்ட் இன்னிங்ஸ் இதுவரை கை கொடுக்கவில்லை. அவர் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ராய் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். செகண்ட் இன்னிங்ஸ் சரியாக போகவில்லை என்ற கவலையில் ஒப்புக் கொண்டாரா இல்லை கரண் ஜோஹாரின் படம் என்பதால் சம்மதித்தாரா என்று கேள்வி எழுப்பினார்கள்.

நல்ல நடிகையான ஐஸ்வர்யா ராயை ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கரண் ஜோஹார் அசிங்கப்படுத்திவிட்டார் என்று ரசிகர்கள் குமுறினார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் திருமணம் குறித்து
அமிதாப் பச்சன் தன் பிளாக்கில் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராயை தன் மருமகளாக அல்ல மாறாக மகளாக பார்க்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஐஸ்வர்யா, அபிஷே் திருமணம் அமிதாப் பச்சனின் பங்களா வளாகத்தில் இருந்த குல்மோஹார் மரத்தடியில் நடந்தது. மும்பையில் அண்மையில் பெய்த கனமழையில் அந்த மரம் சாய்ந்துவிட்டது.

இது பற்றி அமிதாப் பச்சன் கூறியிருப்பதாவது,

குல்மோஹார் மரம் பல ஆண்டுகளாக இருந்தது. பின்னர் அதுவாக விழுந்துவிட்டது. அத்துடன் 43 ஆண்டு கால வரலாறும் சாய்ந்துவிட்டது. 1976ம் ஆண்டு எங்களின் முதல் பங்களாவில் அந்த மரக் கன்றை நட்டோம். நட்டு வைத்தபோது சில இன்ச் மட்டுமே இருந்தது. ஆனால் வளர்ந்த பிறகு ஆஜானுபாகுவாக நின்றது.

அழைத்தபோது பாபுஜி வந்து வீட்டை பார்த்தார். அந்த வீட்டிற்கு பிரதீக்ஷா என்று அவர் தான் பெயர் வைத்தார். என் தந்தையின் கவிதையின் அடிப்படையில் அந்த பெயர் வைக்கப்பட்டது.
எங்கள் வீட்டு பிள்ளைகள் அந்த மரத்தை சுற்றியே வளர்ந்தார்கள். எங்களின் பேரப் பிள்ளைகளும் தான். எங்கள் வீட்டு பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் பிறந்தாள் கொண்டாட்டம், பண்டிகைகளின் போது குல்மோஹார் மரத்தை அலங்கரிப்போம். என் பிள்ளைகள் அந்த குல்மோஹார் மரத்தின் அடியில் தான் திருமணம் செய்து கொண்டார்கள். அது அவர்களுக்கு பாதுகாவலர் போன்று நின்றது என்றார்.

அமிதாப் பச்சன் தற்போது தன் குடும்பத்துடன் மற்றொரு பங்களாவான ஜல்சாவில் வசித்து வருகிறார். அமிதாப் பச்சனை பார்க்க ஞாயிறுதோறும் ரசிகர்கள் ஜல்சா முன்பு கூடுவார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார்.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்த குலாபோ சிதாபோ படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே