அடுத்த சிக்கல்; இனிமேல் புது போன் வாங்கினால் சார்ஜர் இலவசமாக கிடைக்காதாம்!

சாம்சங் ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. செலவைக் குறைப்பதற்கான வழிமுறையாக சாம்சங் நிறுவனம் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை தொகுக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்த திட்டம் குறித்த விவரங்கள் தற்போது தெளிவாக இல்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அறிக்கை கூறியுள்ளது, ஆனால் சாம்சங் இந்த மூலோபாயத்தைப் பற்றி விவாதித்து வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது பலனளித்தால், சாம்சங் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களை மிகவும் ஆக்ரோஷமான விலைக்கு விற்பனை செய்யக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
தென் கொரிய வெளியீடான ETNews இன் அறிக்கையின்படி, சாம்சங் அடுத்த ஆண்டு முதல் தனது ஸ்மார்ட்போன்களின் சில்லறை பேக்கேஜிங்கில் வால் சார்ஜரை சேர்க்க கூடாது என்று திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் அதிகரித்து வரும் செலவுகளை குறைக்க சாம்சங் நிறுவனம் இதைச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவை இயக்குவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறை புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போதும் சார்ஜர்கள் வந்து குவிகின்றன, அது யூ.எஸ்.பி டைப்-சி அல்லது டைப்-ஏ ஆக கூட இருக்கலாம். எனவே அடுத்து வரும் புதிய தொலைபேசிகளிலிருந்து சார்ஜர்களை அகற்றுவதென்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்கிற நம்பிக்கையும் தான்.

இருப்பினும், இது குறித்து சாம்சங்கிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்பதால், மேலே கண்டா அத்துணை காரணங்களும் வெறும் ஊகம் மட்டுமே.

அடுத்த ஆண்டு இது நடந்தால், முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விலைகள் கடுமையாக குறையக்கூடும், ஆனால் இந்த நேரத்தில் அது எவ்வளவு தூரம் குறையும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், விலை உயர்ந்த சார்ஜர்களை கொடுக்காத பட்சத்தில் நாம் ஒரு நியாமான விலைக்குறைப்பை எதிர்பார்க்கலாம்.

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் 12 சில்லறை பெட்டியிலிருந்து சார்ஜரை விலக்க திட்டமிட்டுருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, அத்துடன் வயர்டு ஹெட்ஃபோன்களையும் நீக்க திட்டமிட்டுள்ளது.
சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற ஸ்மார்ட்போன் துறையின் பெரிய கைகள் உண்மையிலேயே இந்த நடவடிக்கையுடன் சென்றால், மற்ற உற்பத்தியாளர்களும் இதை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். ஆகமொத்தம் அடுத்த 2021 ஆம் ஆண்டு வெளியாகும் எந்த ஸ்மார்ட்போன்களின் ரீடெயில் பெட்டியிலும் சார்ஜர் இல்லாமலும் போகலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே