மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

விழாக்கால சுற்றுலாவுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நாடு இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.

மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

அப்போது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இந்தியாவில் கொண்டாடப்படுவதை அவர் குறிப்பிட்டார். மேலும் தீபாவளித்திருநாள் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா விழாக்கால சுற்றுலாவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ள நாடு என்றும், அதனை ஊக்குவிக்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்திய அவர், கடந்த ஓராண்டில் மட்டும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை 26 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே