பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கேரளாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

கேரளாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், கேரள சட்டசபை கூட்டத்தொடர், இன்று, 24ல் துவங்கியது..

இதில், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மாநிலத்தில், கொரோனா பரவல், சற்று அதிகரித்துள்ள நிலையில், கேரள சட்டசபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இருக்கைகள் தள்ளி தள்ளி அமைக்கப்பட்டன.

சட்டசபை கூட்டத்தை பார்வையிட, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மாநிலத்தில், இப்போது தங்க கடத்தல் விவகாரத்தை வைத்து, அரசு மீது காங். மூத்த தலைவர் சதீஷன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

வேறு எந்த அலுவல்களும் மேற்கொள்ளாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 10 மணி நேரத்திற்கு மேல் விவாதம் நடந்தது.

பெரும் கூச்சல் குழப்பத்திற்கு பின் அங்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.

ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 87 எம்.எல்.ஏ.,க்களும், காங்.கூட்டணிக்கு 40 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே