ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்..; சகோதரர் சத்தியநாராயணா தகவல்..!!

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார்.

படப்பிடிப்பின் போது அந்த குழுவில் உள்ள சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். முடிவு நெகட்டிவ் என வந்தபோதிலும் அவர் ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சில பரிசோதனைகள் எடுப்பதற்காகவும், சிலவற்றின் முடிவுக்காகவும் ரஜினிகாந்த் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க வேண்டும் என நேற்று கூறப்பட்ட நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே