தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 90,824. 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 10,814. இதுவரை 4,612 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு புதிதாக 86 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 85.

மற்றொருவர் துபைக்குப் பயணம் மேற்கொண்டவர். இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பில் தமிழகம் இரண்டாவது நிலையில்தான் உள்ளது. ” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே