நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.