இன்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுறது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பு, வேட்பாளரின் பலம், பலவீனம் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுறது. 

நேற்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்தது. இதையடுத்து தொகுதி பங்கீடு முழுமையாக இறுதி செய்யப்பட்டு 7 அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

10ம் தேதிக்குள் முன்பே தேர்தல் அறிக்கை மற்றும் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தான் மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆகவே, இன்றைய தினத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு, வேட்பாளர் முதற்கட்ட பட்டியல் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

அதிமுக நேரடியாக போட்டியிட கூடியவை குறித்து இந்த வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே