வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு – இன்று விசாரணை..!!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னான்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப் பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.

வன்னியர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா மீது விவாதம் என்பது உடனடியாக நடைபெற்றது.

விவாதத்தை தொடர்ந்து இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படடது.

இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னான்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த மனுவில் அவர் கூறியதாவது; ஜாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்திய பின்னரே உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

தேர்தலுக்காக தமிழக அரசு அவசர கதியில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது சட்ட விதிகளுக்கு எதிரானது. தமிழகத்தில் குரும்ப கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே