பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி நிலையில் சற்று முன் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மணிகண்டன் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அவரை கைது செய்தனர். 

இதனையடுத்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே