சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய இணைப்பு தேவைப்படுவோர் அதற்கான விண்ணப்பத்தை சேவை மையம் மூலமாக அவர்கள் விண்ணப்பம் செய்து பெறலாம். அதுமட்டுமல்லாமல் மின் துண்டிப்பு மின் சம்மந்தமான அனைத்து புகார்களையும் இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் மின்வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே