பெற்றோர்களே உஷார் : 13 வயது சிறுமி வயிற்றை அடைத்த தலைமுடி

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட் கவர் உட்பட பல பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுள்ளார்.

அப்பொழுது சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது உடலில் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொழுது, சிறுமியின் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவகுழுவினர் அவற்றை அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே