இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே