இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 இருபது ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் இருபது ஓவர் போட்டி, ஐதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி மற்றும் பொல்லார்டு தலைமையிலான அணிகள் மோதவுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இப்போட்டியில் க்ரீஸ் நோ பால்களை கள நடுவர் முடிவுசெய்யாமல், டிவி நடுவர் எனப்படும் மூன்றாவது நடுவரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது இரு அணிகளுக்கு இடையேயான நடப்பு தொடர் முழுவதுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே