“அதிமுக கூட்டணி ஒரு மட்டமான கூட்டணி” – உதயநிதி ஸ்டாலின்

அதிமுக கூட்டணி ஒரு மட்டமான கூட்டணி மற்றும் கொள்கையே இல்லாத கூட்டணி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் சட்ட நகலை கிழிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் வரும் 17-ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும்; இதில் இளைஞரணி சார்பாக தான் கலந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவில் இளைஞர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே