இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – கபில் சிபல் வாதம்!

இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் சிவசேனா தரப்பில் கபில் சிபல் வாதிட்டுள்ளார்

மகாராஷ்ட்ராவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதித்ததில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருப்பதாக கூறி, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று காலை 11.30 மணி முதல் விசாரித்து வருகிறது.

சிவசேனா தரப்பில் வாதிட்ட கபில் சிபல், கர்நாடகா போல 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்; பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தால் சட்டப்பேரவையில் அவர்கள் நிரூபிக்கட்டும், இல்லையெனில், நாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்.

உத்தவ் தாக்கரேவை முதல்வராக்குவது என 3 கட்சிகளின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் வாதிட்ட அபிஷேக் மனு சிங்வி, குதிரை பேரத்தை தடுக்க இன்றே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். மேற்கொண்டு வாதங்கள் நடைபெற்று வருகிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 403 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே