சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்: யாரை எச்சரிக்கிறார் வனிதா?

சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம் என்று வனிதா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டபோது பலரும் வாழ்த்தினார்கள். ஆனால் பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் தெரிவித்த பிறகு வனிதாவை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த பெண்ணின் கணவரை வனிதா எப்படி திருமணம் செய்து கொள்ளலாம். விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். படித்த பெண்ணான வனிதா எப்படி விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட ட்வீட்டை பார்த்த வனிதா, நான் நன்றாக படித்தவள் தான். இது என் தனிப்பட்ட வாழ்க்கை, உங்கள் ஷோ இல்லை என்று விளாசினார். இதையடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தான் போட்ட ட்வீட்டுகளை நீக்கினார்.

இந்நிலையில் வீடியோ கால் மூலம் வனிதாவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் ஒரே நேரத்தில் பேட்டி கொடுத்தார்கள். அந்த பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை போடி, வாடி என்று மரியாதை இல்லாமல் பேசி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மோசமாக விமர்சித்தார்.

அதன் பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து ட்வீட் செய்தார். மற்றவர்களையும் ஹெலனுக்கு ஆதரவாக ட்வீட் செய்யுமாறு கூறினார். இதை பார்த்த வனிதா யார் ட்வீட் செய்தாலும் எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை கிடைக்கப் போவது இல்லை என்றார்.
இதற்கிடையே லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ட்வீட்டிய கஸ்தூரியை திட்டினார் வனிதா. எலிசபெத் ஹெலனுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக இது ஒன்றும் கோர்ட் ரூம் டிராமா படம் இல்லை என்று கஸ்தூரியை விளாசினார். மேலும் கஸ்தூரியை தன் ஒரிஜினல் தொழிலையை செய்யுமாறு கூறினார் வனிதா. இதை பார்த்த கஸ்தூரி வனிதாவை விளாசினார்.
கஸ்தூரியை ட்விட்டரில் பிளாக் செய்த வனிதா சிறு நேரத்தில் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் வனிதா இன்ஸ்டாகிராமில் சிங்கத்தின் புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது,
சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம். கடவுளின் மகள்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிங்கம் இருக்கிறது. அந்த சிங்கம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
வனிதாவின் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரியும். அது என்ன செய்ய வைப்போம். இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று போலீசாருடம் வேறு மோதுகிறீர்களா?. சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது புகார் கொடுக்க சென்னை துணை போலீஸ் கமிஷனரை சந்தித்தபோதும் உங்களின் வழக்கறிஞர் ஸ்ரீதர் போலீசார் மீது குறை சொன்னார். இந்நிலையில் நீங்கள் இப்படி போஸ்ட் போட்டிருக்கிறீர்கள்.

என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து தான் செய்கிறீர்களா?. இவ்வளவு ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு பீட்டர் பால் ஒர்த் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

வனிதாவின் ஆதரவாளர்களோ,

அக்கா தைரியமாக இருங்கள். சட்டத்தை தன் கடமையை செய்ய வைப்போம். உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். உங்களை விமர்சிப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்திருப்போரை மட்டும் பார்க்கவும் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே