நடிகையின் பாலியல் புகார் – முன்னாள் அமைச்சர் ஜாமின் மனு..!!

நடிகை அளித்த பாலியல் புகாரில், போலீசாரால் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக கடந்த வாரம் நடிகை சாந்தினி அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் பதிவான புகாரின் பேரில்,ஆரம்பகட்ட விசாரணை இல்லாமல் தம் மீது அவசரம் அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் தமது மனுவில் கூறியுள்ளார்.

நடிகை சாந்தினி உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்த தாகவும், அதை பரணி திருப்பி கேட்டதால், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளதாக மணிகண்டன் தெரிவித்திருக்கிறார். 

சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்படுகிறார்.

மலேஷியாவில் இதுபோல சாந்தினி பலரை மோசடி செய்துள்ளதாகவும் அவர் தமது ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே