உயிருடன் இருந்த சகோதரரை குளிர்பதன சவப்பெட்டியில் வைத்த சம்பவம்..; தம்பி சரவணன் மீது வழக்குப் பதிவு..!!

உயிருடன் இருந்த சகோதரரை குளிர்பதன சவப்பெட்டியில் வைத்த சம்பவத்தில் தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் 78 வயதான பாலசுப்ரமணியகுமாரை அவரது தம்பி சரவணன்(70) கை கால்களை கட்டி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்துள்ளார்.

இதனால் முதியவர் பாலசுப்ரமணியகுமார் உயிருடன் துடித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சவப்பெட்டியை கொண்டு செல்ல வந்தவர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குளிர்பதனப் பெட்டியில் உயிருடன் துடித்துக்கொண்டிருந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த விசாரணையில் தனது அண்ணன் இறந்துவிட்டதாக கூறி சவப்பெட்டியை வரவழைத்த சரவணன் அவரை உயிருடன் உள்ள வைத்து கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

சவப்பெட்டி உரிமையாளர்கள் கேட்டபோது கூட, இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார் என்று சரவணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதியவர் பாலசுப்ரமணியகுமாரின் தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வயது மூப்பால் அவரை பார்த்து கொள்ள முடியாததால் இப்படி ஒரு முடிவை எடுத்தார்களா? அல்லது சொத்து தகராறு காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே