மனைவி சாப்பாடு தராததால், முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தீக்குளிப்பு!

தமிழக முதல்வர் இல்லத்திற்கு அடிக்கடி வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வந்த நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அடிக்கடி மனைவியுடன் சண்டையிடும் வினோத், சண்டை போடும்போதெல்லாம் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வந்தார்.

இதுவரை இரண்டு முறை மனைவி சாப்பாடு போடாததால் போலீஸுக்கு போன் செய்து முதல்வர் இல்லத்தில் வெடிக்குண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார்.

கடந்த மாதம் விடுதலையான இவர் மீண்டும் வீட்டில் சண்டை போட்டுள்ளார். ஆனால் இம்முறை வெடிகுண்டு மிரட்டலை தவிர்த்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார் வினோத்.

சண்டையில் ஆத்திரமடைந்த அவர் பெட்ரோலை ஊற்றி கொளுத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அக்கம்பக்கத்தினர்.

பாதிக்கு பாதி தீ காயமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே