திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்படும் என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள பேரையூர் ,டி.கல்லுப்பட்டி பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரசாரம் செய்து பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா எனக்கு முகவரி தந்தார். இன்றைக்கு தமிழகத்தில் அம்மா வழியில் நல்லாட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார்.

அவருக்கு துணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தியும், உதயநிதியும் வேடிக்கை பார்க்க வந்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக கூட்டணி தான். ஆனால் ரோசம் இல்லாமல் இருவரும் வேடிக்கை பார்த்தனர்.

மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மதிப்பளித்து அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பாரத பிரதமரை நேரில் சந்தித்து அதற்கு அனுமதி பெற்றுத் தந்தார்.

இதே ராகுல்காந்தி தமிழ் கலாசாரம், மொழி, இனம் என்று பேசியுள்ளார். இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை காவு கொடுத்தது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான்.

அதேபோல் நமது பாரம்பரிய பொங்கல் விழாவில் ஸ்டாலினும், ராகுலும் செருப்பு போட்டு கொண்டனர். அதேபோல் அடுப்பே பற்ற வைக்காமல் ஸ்டாலின் பொங்கல் கிண்டுகிறார்.

இவர்களெல்லாம் தமிழ் மொழி கலாச்சாரம் பேச எந்த தகுதியும் கிடையாது.

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராம், உதயநிதி வருங்கால முதல்வர் வேட்பாளராம் ராகுல் காந்தி சரிபட்டுவர மாட்டார். உதயநிதி எதிர்க்கும் சரிப்பட்டு வரமாட்டார்.

கழனி முதல் கல்யாண வீடு வரை செருப்பைக் கழட்டிவிட்டு நமது முதல்வரும், துணை முதல்வரும் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் தமிழக கலாசாரத்தை மதிப்பார்கள். தற்போது தேர்தல் களத்தில் ஸ்டாலில் டிசைன் டிசைனாக விளம்பரம் கொடுக்கிறார்.

நமக்கு நாமே என்று கொடுத்தார் 2016 தேர்தலில் அனைவரும் கோபப்படுங்கள் என்று கத்தினார். மக்கள் கோபப்பட்டு திமுக ஆட்சி எங்களுக்கு தேவையில்லை.

நீங்கள் ஆக ஆக என்று அறிக்கை மட்டும் விடுங்கள். அது மட்டும் போதும் என்று மக்கள் முடிவெடுத்தனர். கிராமசபைக் கூட்டம் போட்டார். இரண்டு ஏக்கர் நிலம் சொன்னீர்கள் எங்கே கொடுத்தீர்கள் என்று மக்களிடம் கேள்வி வந்தவுடன் கைப்புள்ள சங்கம் போல் ஸ்டாலின் கலைத்துவிட்டார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் என்று ஊர் ஊராக கடைகளில் போர்டு வைத்துள்ளார். வியாபாரிகள் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஐந்து பைசா வருமானம் உங்களுக்கு கிடைத்தாலும் அப்படியே கல்லாப்பெட்டியை திமுகவினர் தூக்கி போய்விடுவார்கள்.

திமுக சண்டை போடாத ஒரே இடம் சாக்கடை ஒன்று தான்.

ஸ்டாலின் வராரு விடியல் தர போறாரு என்ற பாடல் ஒளிபரப்புகிறார்கள்.

ஆனால் அந்த பாடலில் அர்த்தம் என்னவென்றால் ஸ்டாலின் வராரு, பேஜாரு, பிரியாணி கடை உஷாரு, விக்கு வைத்து சிரிப்பார்கள், மக்களெல்லாம் உஷாரு என்ற அர்த்தமாகும்.

ஸ்டாலின் பாட்டாளி, மாணவன், மீனவர் உள்ளிட்ட வேஷம் போடுவார் ஏன் பூசாரி வேடம் போட்டு பேய் கூட ஒட்டுவார்.

இன்றைக்கு அதிமுகவை பார்த்து திமுகவிற்கு மரண பீதி ஏற்பட்டுள்ளது. திமுகவை போல் ஏமாற்றி பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டோம். இன்றைக்கு 100 யூனிட் மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மா அரசு செய்துள்ளது.

திமுக பிணம் தின்னும் கழுகு போல் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்படும்.

ஓட்டு போடும் மக்கள் நீங்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜக ஆட்சியாக இருக்கும் உங்கள் விரலில் தான் உங்கள் வாழ்க்கை உள்ளது.

சொன்னதை செய்யும் அரசு அம்மா அரசு, சொல்லாத செய்யும் அரசு அம்மா அரசு இன்றைக்கு தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் ,மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய், வீட்டுக்கு ஒரு அரசு பணி, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, ஓய்வு திட்டம் 1000 இருந்து 2000 ஆக உயர்வு மக்களின் உயர்வுக்காக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் திமுகவிற்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் நீங்கள் எடுக்க வேண்டும். தமிழகம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த தேர்தல் மூலம் வீரநடை போட மாண்புமிகு முதலமைச்சர் மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமைத்திடும் வண்ணம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமாருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு வாக்குக் அளியுங்கள் என்று அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே