பீகார் மாநில சட்டசபைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது சட்டசபையின் காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது.

கொரோனா வைரஸ் காலத்தில் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீர்கா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு இன்று 12:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் சட்டசபையில் தற்போது நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பீகார் சட்டசபைக்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன என்பதும் இதில் 122 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஜனதா தள், பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே