திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது: நடிகை த்ரிஷா

திரைப்படங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, சினிமா என்பது கற்பனையே என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக உள்ள நடிகை திரிஷா பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய திரிஷா பள்ளிகளில் பாலியல் பிரச்சினை தொடர்பாக மாணவிகளிடம் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது என கூறினார். சிறுவர் சிறுமிகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும் செயல்படுத்தவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வலுவான சட்டம் தேவை என கூறியவர் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே