முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து..!!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். பின்னர், மீதமுள்ள 33 அமைச்சர்கள் தொடர்ந்து பதவியேற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் சூரிய தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் ” ‘முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். சுவாசிப்பதற்கு “உயிர் காற்று’ கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம் தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே