புதுச்சேரியில் ஆட்சி நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : நாராயணசாமி

புதுச்சேரியில், கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் முகாமில் நேற்று கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை; எதற்கு இந்த ஆட்சி என்று பேசியுள்ளார்.

டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கும் முகாமை புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நேற்று துவங்கியது.

இதில் பேசிய முதல்வர், இலவச அரிசி விவகாரத்தை சுட்டிகாட்டி, இன்று ஒரு கறுப்பு தினம். மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை.

நீதிமன்றமாவது நமக்கு உதவும் என பார்த்தும் ஒத்துழைப்பு இல்லை. இந்த ஆட்சி இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்’ என கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை வெளியே அனுப்பிய முதல்வர் கண் கலங்கி குரல் தழுதழுத்து, மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.எதற்கு இந்த ஆட்சி என பேசினார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே