வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் பிள்ளைகள் கல்விச் செலவை தானே ஏற்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் டிவி மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி(42). அது இது எது, சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்த அவர், தனது மனைவியுடன் சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த ஷூட்டிங்கிலேயே உடல்நல குறைவுடன் இருந்த அவர், மயங்கி விழுந்ததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், வடிவேல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.

வடிவேல் பாலாஜியின் மறைவு அவருடன் பணியாற்றியவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் 2 பிள்ளைகளின் கல்விச் செலவையும் தானே ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கல்லூரி படிப்பு வரையில் அவர்களின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது இது எது, சிரிச்சா போச்சு உள்ளிட்ட காமெடி ஷோக்களில் வடிவேல் பாலாஜியுடன் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்றினார் என்பதும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் நினைவு கூரத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே