சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தவசி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் தவசி, தன்னுடைய சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தவசி மற்றும் உடனிருக்கும் உதவியாளருக்கு 3 வேளை உணவு வழங்கப்படும் என்றும், நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் தவசிக்கு சிவகார்த்திக்கேயன் ரூ.25,000 நிதி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சமும், நடிகர் சுவுந்தரராஜா சார்பில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே