தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படத்தை சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்குகிறார்.
நடிகர் அஜித்துடன் இணைந்து விவேகம், வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை அளித்த இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், ரஜினியின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை தலைவர் 168 என சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.