ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி காலமானார்..!!

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே