தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு; தமிழக அரசு

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் (இன்று) முடிவு பெறுகிறது.

2020 – 2021 கல்வி கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை இன்னும் தமிழகத்தில் திறக்கவில்லை.

இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் (இன்று) முடிவடைய உள்ளதால், வரும் நவம்பர் மாதம் ஊரடங்கை நீக்கலாமா? அல்லது நீட்டிக்கலாமா? என்பது குறித்து அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிகள் 9,10,11,12ம் வகுப்புகள் மட்டும் மற்றும் கல்லூரிகள் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற நவம்பர் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதி அளிக்கப் படுகின்றன தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள் பத்தாம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே