இத்தாலிக்கு உதவும் சீனா, கியூபா, ரஷ்யா…!

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு சீனா, கியூபா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மருத்துவர்களை அனுப்பி உதவியுள்ளன.

கொரோனா பரவத் தொடங்கிய சீனாவைக் காட்டிலும் இருமடங்கு இழப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு சீனா 22 மருத்துவ வல்லுனர்களையும், 30 டன் மருத்துவப் பொருட்களையும் அனுப்பி உதவியுள்ளது.

கொரோனா சிகிச்சை குறித்த நுட்பங்களை இத்தாலிய மருத்துவர்களுக்கு சீன மருத்துவர்கள் விளக்கி வரும் நிலையில், எபோலா தொற்றின்போது சிகிச்சை அளித்த 52 மருத்துவர்கள் கொண்ட குழுவை கியூபா, இத்தாலிக்கு அனுப்பியுள்ளது.

100 ராணுவ மருத்துவர்களை அனுப்பியுள்ள ரஷ்யா, கிருமி நாசினி தெளிக்கும் டிரக்குகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் இத்தாலிக்கு அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே