கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் கடையின் இடைவெளி வரிசை ஐடியா…

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜவுளி கடைகள், நகைக் கடைகள், மதுபான பார்கள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை அடைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 22ம் தேதி ‘மக்கள்-ஊரடங்கு’ என்ற முறையில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம், வெளியிடங்களுக்கு வருவோர் சமூக இடைவெளியை விட்டு இருப்பது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் பொதுமக்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளது.

அதனை மிகச் சரியாக பின்பற்றி மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே