அம்மா உணவகத்திற்கு 50 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!

ஊரடங்கால் உணவுக்காக திண்டாடுபவர்களுக்கு அம்மா உணவகங்கள் இலவசமாக உணவு அளித்துவரும் நிலையில். அதன் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக திறந்திருக்கும் சில உணவகங்களிலும் அதிகம் பேர் பார்சல் வாங்கி சாப்பிட முடிவதில்லை.

புலம் பெயர் தொழிலாளர்கள், வீடுகளின்றி வசிப்போர், பணி ரீதியாக வீடுகளை விட்டு வெளியே தங்கியிருப்போர் ஆகியோர்கள் உணவுக்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பல இடங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் அளித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் சார்பில், தொகைக்கான காசோலையை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர், நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கினார்.

இதனை அடுத்து, மாநகராட்சி சார்பில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே