சென்னை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் செல்லாது!

டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

ஆனால் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு இந்த ஃபாஸ்டேக் முறை செல்லாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற 15-ம் தேதியிலிருந்து ஃபாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்த மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது.

அனைத்து சுங்கச்சாவடிகளையும் ஸ்கேனிங் முறையில் கட்டணம் செலுத்தி வாகனங்கள் கடந்து செல்லலாம்.

ஆனால் மாநில நெடுஞ்சாலை இருக்கக்கூடிய பெருங்குடி, சோளிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை வழக்கமான முறையில் நேரிடையாக டோல்களில் கட்டணம் செலுத்திய பிறகு பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதியில் இருக்கக்கூடிய 5 சுங்கச்சாவடிகளை கடந்து செல்கிறது.

இந்த சுங்கச்சாவடிகளை சுற்றிலும் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் வாகனங்கள் வருடம் ஒருமுறை கட்டணம் செலுத்தி வேகமாகவும் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து வாகனங்களும் இந்த திட்டத்தில் இணைய முடியாது.

எனவே மாநில நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றம் செய்தால் வாகனங்கள் வேகமாக புறப்பட ஏதுவாகும்.

அனைத்து டோல்களிலும் ஃபாஸ்டேக் ஒரே முறையாக கொண்டுவர வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்

சென்னையின் ஐடி நகரமாக திகழும் இந்த பகுதியில் தினசரி ஒரு லட்சம் வாகனம் பயணம் செய்கின்றனர்.

இதனால் பல மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே