நடிகர் கார்த்தியிடம், அவரது அண்ணனான நடிகர் சூர்யா `அண்ணனா நான் பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே’ எனக்கூறி ட்வீட் செய்திருக்கிறார்.
இது இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா திரைத்துறைக்கு வந்து, 25 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி, அவரை பாராட்டி அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி, இன்று ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், ‘தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தவர் அவர். தனது சொந்த சாதனைகளை தானே முறியடித்து முந்துவதில் மட்டுமே அவர் எப்போதும் கவனமாக செலுத்தினார்.
தனியொரு நபராக, அவர் தன்னுடைய நல் எண்ணத்தை இன்னும் இன்னும் விரிவடைத்துக்கொண்டவர் அவர். தற்போது அத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையையும் அவர் வடிவமைத்திருக்கிறார். அதுதான் என் அண்ணன்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக, நடிகர் சூர்யா அதை ரிட்வீட் செய்திருக்கிறார். அதில் அவர் `வந்தியத்தேவா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கார்த்தி தனது பதிவில் குறிப்பிட்டிருந்த புகைப்படம் ஏற்கெனவே வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.