இந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்… விஜய் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான்?

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய, பாலிவுட்டில் அதிரடி முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய, பாலிவுட்டில் அதிரடி முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். மாஸ்டர் படம் வெளியான பிறகு அதன் வீடியோ வெளியானது. தற்போது அவரை அந்தப் பாடல் யூ-ட்யூபில் 105 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மாஸ்டர் படம் டப்பிங் செய்து இந்தியில் வெளியிடப்பட்டாலும், இப்படத்தை நேரடியாக இந்தியில் தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. கபீர் சிங் தயாரிப்பாளர், முராத் கெதானி மற்றும் எண்டெமால் ஷைன் ஆகியோர் இந்தியில் மாஸ்டர் படத்தை தயாரிக்கவுள்ளனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் ஜேடி, பவானி ஆகிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சிறந்த நடிகர்களை அணுகும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களாம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை இந்தப் படத்தில் நடிக்க வைக்க, அவர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.

முராட் மற்றும் எண்டெமால் குழு கடந்த 30 நாட்களில் சல்மான் கானுடன் இரண்டு சந்திப்புகளை நடத்தியுள்ளது. அந்த சந்திப்பில் மாஸ்டர் பற்றி விவாதிக்கப்பட்டதாம், சல்மான் படத்தின் கதையை விரும்பியதோடு, அதில் நடிக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே