சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடங்கள் இலவசமாக ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்களுக்கு இலவசமாக இடம் வழங்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிண்டிகேட் ஒப்புதல் தந்த பிறகு வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.இலவச கல்வித் திட்டத்தில் 340 ஏழை மாணவர்கள் படித்து வரும் நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இத்தகைய முடிவு எடுத்துள்ளது.