சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை..!!

திருவாரூரில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி, வண்டாம்பாளை, கீழகாவாதுகுடி பகுதியிலுள்ள நிலங்கள், வண்டாம்பாளை தொழிலாளர் குடியிருப்பு – 5 தரைதளம், தரைதளத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பு கட்டடம், முதல் தளத்திலுள்ள விருந்தினர் கட்டடம், சுற்றுச்சுவர் கட்டடம், மேலாண்மை இயக்குநர் பங்களா உள்ளிட்டவை தமிழ்நாடு அரசால் அரசுடமைக்கப்பட்டுள்ளன.

இந்த சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு உரியது எனத் தெரிவித்துள்ளார். 

இந்த சொத்துகளில் என். சசிகலா, வி.என்.சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே