மது வாங்க ஆதார் அட்டை: நீதிமன்ற நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு முறையீடு

டாஸ்மாக் கடையில் மது வாங்க வருவோருக்கு ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

பலரிடம் ஆதார் இல்லை என்பதால் அதற்கு விலக்கு அளிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறந்ததற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மேலும் மதுக்கடைகளில் டிஜிபி பிறப்பித்த உத்தரவு, அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அதில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்ற கவனித்திருந்தால் டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்படும் என்று தெரிவித்தது.

குறிப்பாக கூட்டத்தை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து விட்டு மதுபானங்களை விற்க முடியுமா என்றும் ஆலோசிக்க வேண்டும் என்றும் சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

அதே போல ஒருவருக்கு 750மில்லி மதுபானம் தான் வழங்க வேண்டும்.

மது வாங்குபவர்கள் பெயர், முகவரி என ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும்.

இதன் மூலம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதை கட்டுப்படுத முடியும் என்றும் நீதிபதிகள் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்கள்.

இந்தநிலையில் தான் தற்போது இந்த வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் ஒரு இணைப்பு மனுவை தாக்கல் செய்தது.

அதில், ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மது விற்கப்படுகின்றது.

ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பலரும் ஆதார் இல்லாமல் வருகின்றார்கள்.

இதனால் அதிகமான கூட்டம் கூடுகின்றது எனவே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 14-ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே