மதுவை ஆன்லைனில் விற்க முடியாது – தமிழக அரசு பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மொத்த செலவுகளையும் அரசே ஏற்பதால், அரசுக்கு நிதி நெருக்கடி நிலவுகிறது.

அதனால் கிட்டத்தட்ட 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதனால் கடை எப்போது திறக்கப்படும் என்று குடிமகன்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சென்னை காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாஸ்க், அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்றால் தான் மது கொடுக்கப்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் திறப்பதை தடை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுந்த வழக்கில், மது பாட்டில்களை ஆன்லைனில் விற்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்து, ஆன்லைனில் விற்க முடியாது என்று கூறிப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்றும் மொத்த விற்பனை இல்லாமல் தனி நபர்களுக்கே மது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, டாஸ்மாக் திறப்பது குறித்து நாளை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே