திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து பைரப்பல்லி பகுதியில் 17 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் மேற்கூரை இல்லாமல் குளியலரை இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் 17 சிறுமி வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் அருகில் இருந்த வீட்டின் மாடிக்கு சென்று சிறுமி குளிப்பதை பார்த்துள்ளார்.
மேலும் சிறுமி குளிப்பதை அவர் தனது செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார்.
இதனை பார்த்த கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் இளைஞர் தனுஷ்கோடியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவரை உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த புகாரில் தனுஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.