சென்னையில் பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யும் சேவை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று பேருந்து சேவைகள் தொடங்கியது.

பேருந்துகள் எப்போது இயங்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த மக்களிடையே பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு அறிவுறுத்தலின் படி, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து 50% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர்.

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்ததை போலவே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் பெற்ற ரூ.1000 பஸ் பாஸ் லாக்டவுனால் உபயோகிக்கப்படவில்லை என பலர் புகார் தெரிவித்தனர். 

அதனால் வரும் 15 ஆம் தேதி வரையில், கடந்த மார்ச் மாதம் பெற்ற பஸ் பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதே போல புதிய பாஸ்களை கொடுக்க தொடக்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் சென்னையில் நேற்று பஸ் பாஸ் விநியோகம் செய்யப்படும் இடம் செயல்படவில்லை.

அதனால் மக்கள் டிக்கெட்டுகளை பெற்றே பயணிக்க நேர்ந்தது. இந்த நிலையில் சென்னையில் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகம் செய்ய தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி வரிசையில் நின்று பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் புதிய பாஸை 16 ஆம் தேதிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே