முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார்… விசாரணைக்கு பரிந்துரை!!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார் எழுந்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக பீலா ராஜேஷ் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தலைமை செயலாளருக்கு, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னதாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தற்போது, வணிக வரித்துறைக்கு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். சுகாதாரத்துறை செயலராக இருந்தபொழுது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்படகாகவும் தகவல் வெளியானது.

ஊரடங்கு நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பிரம்மாண்ட பங்களா ஒன்று கட்டி கிரகப்பிரவேசம் செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளருக்கும், லஞ்சஒழிப்புத்துறைக்கும் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகரானது மத்திய ஊழல் துறைக்கும், பொது பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த புகாரில் பல்வேறு குற்றசாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாயில் காட்டிய சொத்து விவரம்:

அதில் அவரின் ஆண்டு வருமான கணக்கில் சில அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட்டிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்புக கொட்டிவாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் வீடு, சூளைமேட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு, ரூ.2 கோடி மதிப்பில் 1.5 ஏக்கர் விவசாய நிலம், 7500 சதுர அடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம், கொடைக்கானலில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு, நெற்குன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் ரூ.1.4 கோடி மதிப்பில் வீடு ஆகியவை இருப்பதாக ஆண்டு வருமான கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் அதிகமாக வருவதாகவும், அதில் சில குளறுபடிகள் இருப்பதாக புகாரில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக தலைமை செயலகம் சார்பில் பரிந்துரை கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே