மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்வது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஒரு சில மாதங்களாக தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மாதம் ஒரு முறை மின் கட்டணம் நிர்ணயித்து, கட்டணம் வசூலிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசிக்க இருப்பதாக தங்கமணி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.