3 வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொன்ற நபர்..!

சென்னை அருகே மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை எட்டி உதைத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பள்ளிக்கரனை அடுத்த சித்தாலபாக்கத்தில் வசித்து வரும் கங்கா என்ற பெண்ணுக்கு 3 வயதில் அருண் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது.

இவரது முதல் கணவர் உயிரிழந்த நிலையில், கட்டட வேலை செய்யும் வெங்கடேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். 

இதனிடையே மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த அருண் மீது வெங்கடேசன் வெறுப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில்  குழந்தை அருணை வெங்கடேசனிடம் விட்டுவிட்டு கங்கா தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த வெங்கடேசன், குழந்தை அருணை காலால் எட்டி உதைத்துள்ளார். 

இதனால் குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தது.

குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தையின் தாய் கங்கா அளித்த புகாரின் பேரில் வெங்கடேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே